மொபைல் போனில் வழியாக இணையதளங்களை பயன்படுத்தும் சதவீதம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.ஒருவழியாக இந்தியாவிலும் 3G எனப்படுகிற மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்தை சென்னை உட்பட இந்தியாவின் பெருநகரங்களில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருப்பதால் மொபைல் பாவனையாளர்கள் மிக அதிக அளவில் அந்த சேவையை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
அதேபோல் மொபைல் மூலமாக இணைய வானொலிகளையும் நாம் பயன்படுத்தி அதன் மூலம் உலகம் முழுக்க இருக்கின்ற தமிழ் உட்பட பல மொழிகளில் உள்ள வானொலிகளை 24 மணி நேரமும் டிஜிட்டல் ஒலிதரத்தில் நாம் கேட்க முடியும்.
இதற்கு GPRS மற்றும் EDGE தொழில்நுட்ப வேகம் இருந்தால் போதும், நாம் தடையில்லா இணையதள வானொலி சேவைகளை கேட்க முடியும்.3G தொழில்நுட்பம் இருந்தால் அது இன்னும் சிறப்பாக இருக்கும்.
இந்த இணையதள வானொலி சேவைகளை பெற்றுக் கொள்வதற்காகவே நமக்கு இலவச மென்பொருட்கள் கிடைக்கின்றன.அவற்றை நாம் நமது மொபைல் போன்களில் பதிந்து கொண்டால் ஒரு புதிய இசை உலகை நீங்கள் காணலாம்.
பின்குறிப்பு : பின்வரும் வானொலிகளின் பெயர்களின் மேலே "கிளிக்" செய்து அந்தந்த வானொலிகளின் இணையதளங்களில் சென்று சொல்லப்படும் வழிமுறைகளை பின்பற்றி மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
VIRTUALRADIO : இந்த மென்பொருளில் 300 க்கும் மேற்பட்ட மொழி வாரியான வானொலிகளை கேட்கலாம்.குறிப்பாக தமிழ் வானொலிகள் அதிகம் இதில் இடம்பெற்றுள்ளன. ஒலி அமைப்பும் டிஜிட்டல் தரத்தில் உள்ளது கூடுதல் சிறப்பம்சம்.
SPODTRONIC : இதுவும் ஒரு அசத்தலான மென்பொருள்,ஆனால் இதில் தமிழை விட மற்றமொழி இணைய வானொலிகளை தான் நாம் அதிகமாக கேட்கமுடியும்,வந்த புதிதில் இலவசமாக கொடுத்துக்கொண்டிருந்த மென்பொருளை இப்போது காசு கொடுத்தால் தான் தருகிறார்கள். பாடலை கேட்கும் போதே பாடல் இடம்பெற்ற ஆல்பம்,பாடியவர்கள் விபரம்,பாடலை நாம் மதிப்பீடு செய்யும் முறை என்று அசத்துகிறார்கள்.
TUNINFM : இது முழுக்க முழுக்க அயல்நாட்டு மேற்கத்திய இசையை விரும்புபவர்களுக்கான தளம்,மிகக்குறைந்த வேகத்தில் ஒலியின் தன்மை அற்புதமாக உள்ளது.
MUNDU : இந்தியாவில் உள்ள Geodesic Limited என்ற நிறுவனம் தரும் மொபைலுக்கான இணைய வானொலி மென்பொருள் இது. இப்போது மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதிலும் நூற்றுக்கணக்கான வானொலிகளை கேட்கமுடியும்.
LAVELLA RADIO : நூறுக்கும் மேற்பட்ட வானொலிகளை கேட்க முடியும்.இலவச மென்பொருள் தான், இருந்தாலும் இதில் காசு கொடுத்து வாங்கினால் தான் முழுமையான டிஜிட்டல் தரம் கிடைக்கும்.
NOKIA INTERNET RADIO : நோக்கியாவின் சார்பில் அதன் பாவனையாளர்களுக்கு தரப்படும் இணைய வானொலி இலவச மென்பொருள் இது. பெரும்பாலும் போன்களிலேயே பதிந்து வரும். இல்லாதவர்கள் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.சூப்பர் மென்பொருள் இது.
....................................................................................................................................................... Download As PDF
Subscribe to:
Post Comments (Atom)
பதிவுகளை பின்தொடர :
தள நிலவரம்
ஒருவார்த்தை on Facebook
தளத்தில் இருப்பவர்கள்
சமீபத்திய மறுமொழிகள்
அக்கம் பக்கம்
-
-
கருணாநிதியின் வம்சம் 24×76 hours ago
-
-
காற்றின் காதலர்!7 hours ago
-
பார்வைகள்: சுயமரியாதை14 hours ago
-
எண்டர் கவிதைகள்-1118 hours ago
-
-
-
-
மத்தாப் பூ..,1 day ago
-
செம போரான பதிவொன்று2 days ago
-
-
-
-
கி.ரா. என்கிற ஆச்சி3 days ago
-
-
-
-
-
-
மொபைலில் வாசிக்க :
NOTE : this service currently available in USA only
பிரபலமானவை
இப்படியும் வரலாம்
விளம்பரம்



2 comments:
தகவல்கள் புதிது...
கருத்துக்கு மிக்க நன்றி சங்கவி,'ஒருவார்த்தை'யுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Post a Comment
நண்பர்களே,பதிவுகள் குறித்தான உங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துகளை வரவேற்கிறேன்,மேலே இருக்கும் "Smiley Emot Icons" களை உங்கள் பின்னூட்டங்களில் பயன்படுத்த அந்தந்த படத்தின்
அருகில் உள்ள கோடிங்கை :)) எந்த வார்த்தையின் பக்கத்திலும் டைப் செய்து போஸ்ட் செய்யுங்கள். நாகரீகமான வார்த்தைகளின்றி வரும் பின்னூட்டங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நீக்கப்படும்,நன்றி.